Pages

Tuesday, April 10, 2012

கருவில் - குழந்தை

ரொம்ப நாளகவே பதிவு எதுவும் போடல...அதற்கான தேவை இப்போ வந்திருச்சுனு சொல்லலாம் .
கருவில் குழந்தையை சுமக்கின்ற ஒரு தாய் என்னென்ன அனுபவத்தை பெறுகிறாள் அப்படீங்றத என் அனுபவத்திலிருந்து

 முதல் மாத‌த்திலிருந்து...............

மெதுவாய் நட,
பேருந்தில் செல்லாதே..
அதிக வேலை செய்யாதே..
காரம் குறைத்துக்கொள்..
கவனம் தேவை..

நான்காம் மாத‌த்திலிருந்து..........

விருப்பமானதை சாப்பிடு
பழங்களை அதிகமாக சேர்த்துக்கொள்..
ரசனை விரும்பு,
கதை, கவிதை , இசை கேள்.
எப்போதும் சந்தோசமாய் இரு,
நன்றாக வேலை செய்.

ஏழாம் மாதத்திலிருந்து........


தாயென்னும் பக்குவம் பெறு.
கிரிக்கெட்,கால்பந்து எல்லாம் குழந்தை உன் வயிற்றுக்குள் விளையாடும் தொட்டுப்பார்த்து சுகம் காண்.
நமது அலைபேசி உரையாடலில் மட்டும் (வயிற்றில்) அதிகமாய் உதைக்கும். பெரிதொன்றும் இல்லை
மிகவும் விருப்பமானவர்களிடம் பேசும்போடு மட்டும்.உன்னைபோலவே குழந்தையும் சந்தோசமாய் இருப்பதாய் உணர்.

ஒன்பதாம் மாதத்திலிருந்து...............

 வயிற்று வலி அதிகரிக்கும் - ஒன்றும் இல்லை தலை திரும்புதல் இயற்கை.
நடைபயிற்சி மேற்கொள்.
பசியின் தேவை இருக்கும்.நாளுக்கு ஆறு முறை சாப்பிடு.
காரட் அதிகமாய் சேர்த்துக்கொள் சிவப்பாய் பிறக்கும்.
என்னைபோல் , உன்னைப்போல் , ஆண் குழந்தை , பெண் குழந்தை விவாதம் தொடரும்.

பத்தாம் மாதம்.....

ஆனோ, பெண்ணோ என்ன பெயர் வைக்கலாம் யோசனை செய்.
நாள் நெருங்க ஆனந்தத்தின் எல்லைக்குச்செல்.
எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் நம் குழந்தையின் ஞாபகம் வரும்.
நன்றாக‌ குழந்தையைப் பெற்றெடு , அதுவே நமக்கும் நல்ல நாளாய் அமையட்டும்.