என் முதல் பதிவு...இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்...சில வருடங்களாக என்னை IMPRESS , DISTURB (பண்ண விளம்பரம்) எப்படி வேனாலும் வச்சுக்கலாம்..
ஒரு வங்கியோட விளம்பரம் அது; எந்த வங்கி அப்படீங்றதுகூட மறந்திடுச்சு)..ஒரு ஏழு எட்டு வருடங்கள் இருக்கும்; ஒரு முன்னனி நாளிதழில் இந்த விளம்பரத்தை பார்த்தேன்..
அந்த விளம்பரத்தின் தலைப்பு..
கொஞ்சம் கூடுதல் என்பது புதிய உலகையே உருவாக்கிவிடும்..
மற்ற வங்கிகளைவிட நாங்கள் கொஞ்சம் கூடுதல் வட்டி தருகிறோம்...எங்கள் வங்கியில் முதலீடு செய்யுங்கள்.ஆனால் அந்த கொஞ்சம் என்பது உங்களுக்கு புதிய உலகையே உருவாக்கும்..அப்படீங்றத அவ்ளோ அழகா சொல்லியிருப்பாங்க...
ஓட்டப்பந்தயத்தில நிறைய பேர் ஓடி வந்திட்டு இருப்பாங்க..முதலாவதா ஓடி வருகிறவனுக்கும் இரண்டாவதா ஓடி வருகிறவனுக்கும் ஒரு இன்ச் தான் வேறுபாடு இருக்கும்..ஆனால் முதல் பரிசு வாங்குகிறவன் புகழின் உச்சிககே போய்விடுகிறான்.இரண்டாவதா வருகிறவனை யாருமே கண்டுக்க மாட்டோம..உலகமும் அவனைக் கண்டு கொள்ளாது..இந்த விசயத்தை மையமா வச்சு சொல்லப்பட்ட விளம்பரம்தான் அது..கொஞ்சம் கூடுதலாக ஓடி முதல் பரிசை வாங்கியவுடன் உலகம் அவனுக்கு தருகிற மரியாதை அவனுக்கு ஒரு புதிய உலகத்தையே உருவாக்கும்..அதற்காக அவன் செய்தது என்னன்னா அவனைவிட கொஞ்சம் கூடுதலாக ஓடியதுதுதான்..
கொஞ்சம் கூடுதல் என்பது புதிய உலகையே உருவாக்கிவிடும்..so happy invest our bank...
மற்ற வங்கிகளைக்காட்டிலும் எங்கள் வங்கியின் வட்டி விகிதம் கொஞ்சம்தான் கூடுதல் என்றாலும்; முடிவில் உங்களுக்கு ஒரு புதிய உலகையே உருவாக்கிவிடும்..
ஓவ்வொரு முறையும் எனக்கு தோல்விகளோ அல்லது என் முயற்சிகள் மீது தடைகள் வரும்பொழுதோ; இந்த விளம்பரத்தை நினைத்துக்கொள்வேன்...இந்த படம் அந்த வரிகள் இரண்டையும் இணைத்தால் வெளிப்படுகிற கருத்துக்கள் ஏராளம்..
நுனுக்கமான கருத்துகளையும்,அதை எளிமையாக சொன்ன வித்தையையும் தெரிந்து கொண்ட இந்த மாதிரி திறமையானவர்கள்தான் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.என்று என் மனதிற்கு அடிக்கடி தோன்றும்..
No comments:
Post a Comment