ரமேஸ்...ஈரோடு மாவட்டம்;கோபியில்-ஒரு சிறிய கிராமம் எனது பிறந்த ஊர்..தற்போது திருப்பூரில் பணியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்..கோபியில் உயர்நிலைப்பள்ளியில் பனிரண்டாம் வகுப்பு படித்துமுடித்துவிட்டு..எங்கள் சொந்த தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை பார்த்து வந்தேன்..ஒரு நண்பனின் ஆலோசனைப்படி ஆறு மாத காலம் கனிணி பயின்றேன்...பிறகு திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் 2002 லிருந்து இதுவரை (GARMENT DESIGNING -CAD)பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.எனக்கு கவிதை எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்...நான் வைரமுத்துவின் (அரசியலை தவிர்த்து) ரசிகன்..என் இருபது வயதுக்கு மேல் முதலில் வைரமுத்துவின் காதல் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு.அவருடைய புத்தகங்களை பெரும்பாலும் படிக்க தொடங்கினேன்..பிறகு சுஜாதா கதைகளும் என்னைக்கவர்ந்தவை..
பிடிதத விசயங்களைப்பற்றி எழுத,அதைப்பற்றி அதைப்பற்றி எனது எண்ணங்களை சொல்ல..எனக்கு ஒரு கருவியாகவே இந்த பிளாக்கை தொடங்கினேன்..
இந்த பிளாக் தொடங்கியதே வெறும் சினிமாவை மட்டும் விமர்சனம் செய்யவோ..அல்லது காதல் கவிதைகளை மட்டும் எழுதவோ அல்ல..அது சினிமாவ இருக்கலாம்,கவிதையாக இருக்கலாம்.செய்தியாக இருக்கலாம்..எதைப்பற்றியும் வேண்டுமானாலும் இருக்கலாம்.
நான் வாழ்கின்ற,வாழக்கூடிய இந்த சமூகத்தில் நான் பார்த்த விசயங்கள், எனக்கு பிடித்தவை,என்னைக் கவர்ந்தவை அல்லது மீடியாக்கள் மூலமாகவோ , செய்திகள் மூலமாகவோ எல்லோருக்கும் தெரிகின்ற விசயங்களைப்பற்றி எனது எண்ணங்களை என் பார்வையில் பதிவு செய்வதே எனது நோக்கம்.
அதற்கான முயற்சிதான் இந்த பிளாக்........
No comments:
Post a Comment