Pages

Tuesday, April 10, 2012

கருவில் - குழந்தை

ரொம்ப நாளகவே பதிவு எதுவும் போடல...அதற்கான தேவை இப்போ வந்திருச்சுனு சொல்லலாம் .
கருவில் குழந்தையை சுமக்கின்ற ஒரு தாய் என்னென்ன அனுபவத்தை பெறுகிறாள் அப்படீங்றத என் அனுபவத்திலிருந்து

 முதல் மாத‌த்திலிருந்து...............

மெதுவாய் நட,
பேருந்தில் செல்லாதே..
அதிக வேலை செய்யாதே..
காரம் குறைத்துக்கொள்..
கவனம் தேவை..

நான்காம் மாத‌த்திலிருந்து..........

விருப்பமானதை சாப்பிடு
பழங்களை அதிகமாக சேர்த்துக்கொள்..
ரசனை விரும்பு,
கதை, கவிதை , இசை கேள்.
எப்போதும் சந்தோசமாய் இரு,
நன்றாக வேலை செய்.

ஏழாம் மாதத்திலிருந்து........


தாயென்னும் பக்குவம் பெறு.
கிரிக்கெட்,கால்பந்து எல்லாம் குழந்தை உன் வயிற்றுக்குள் விளையாடும் தொட்டுப்பார்த்து சுகம் காண்.
நமது அலைபேசி உரையாடலில் மட்டும் (வயிற்றில்) அதிகமாய் உதைக்கும். பெரிதொன்றும் இல்லை
மிகவும் விருப்பமானவர்களிடம் பேசும்போடு மட்டும்.உன்னைபோலவே குழந்தையும் சந்தோசமாய் இருப்பதாய் உணர்.

ஒன்பதாம் மாதத்திலிருந்து...............

 வயிற்று வலி அதிகரிக்கும் - ஒன்றும் இல்லை தலை திரும்புதல் இயற்கை.
நடைபயிற்சி மேற்கொள்.
பசியின் தேவை இருக்கும்.நாளுக்கு ஆறு முறை சாப்பிடு.
காரட் அதிகமாய் சேர்த்துக்கொள் சிவப்பாய் பிறக்கும்.
என்னைபோல் , உன்னைப்போல் , ஆண் குழந்தை , பெண் குழந்தை விவாதம் தொடரும்.

பத்தாம் மாதம்.....

ஆனோ, பெண்ணோ என்ன பெயர் வைக்கலாம் யோசனை செய்.
நாள் நெருங்க ஆனந்தத்தின் எல்லைக்குச்செல்.
எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் நம் குழந்தையின் ஞாபகம் வரும்.
நன்றாக‌ குழந்தையைப் பெற்றெடு , அதுவே நமக்கும் நல்ல நாளாய் அமையட்டும்.

Tuesday, October 19, 2010

கொஞ்ச‌ம் கூடுத‌ல் என்ப‌து புதிய‌ உல‌கையே உருவாக்கிவிடும்..

என் முதல் பதிவு...இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்...சில வருட‌ங்களாக‌ என்னை IMPRESS , DISTURB (பண்ண விளம்பரம்) எப்படி வேனாலும் வச்சுக்கலாம்..

ஒரு வ‌ங்கியோட‌ விள‌ம்ப‌ரம் அது; எந்த வங்கி அப்படீங்றதுகூட மறந்திடுச்சு)..ஒரு ஏழு எட்டு வ‌ருட‌ங்க‌ள் இருக்கும்; ஒரு முன்ன‌னி நாளித‌ழில் இந்த‌ விள‌ம்ப‌ர‌த்தை பார்த்தேன்..

அந்த‌ விள‌ம்ப‌ர‌த்தின் த‌லைப்பு..

                  கொஞ்ச‌ம் கூடுத‌ல் என்ப‌து புதிய‌ உல‌கையே உருவாக்கிவிடும்..

மற்ற வங்கிகளைவிட நாங்கள் கொஞ்சம் கூடுதல் வட்டி தருகிறோம்...எங்கள் வங்கியில் முதலீடு செய்யுங்கள்.ஆனால் அந்த‌ கொஞ்சம் என்பது உங்களுக்கு புதிய உலகையே உருவாக்கும்..அப்படீங்றத அவ்ளோ அழகா சொல்லியிருப்பாங்க...




ஓட்டப்பந்தயத்தில நிறைய பேர் ஓடி வந்திட்டு இருப்பாங்க..முதலாவதா ஓடி வருகிறவனுக்கும் இரண்டாவதா ஓடி வருகிறவனுக்கும் ஒரு இன்ச் தான் வேறுபாடு இருக்கும்..ஆனால் முதல் பரிசு வாங்குகிறவன் புகழின் உச்சிககே போய்விடுகிறான்.இரண்டாவதா வருகிறவனை யாருமே கண்டுக்க மாட்டோம..உலகமும் அவனைக் கண்டு கொள்ளாது..இந்த விசயத்தை மையமா வச்சு சொல்லப்பட்ட விளம்பரம்தான் அது..கொஞ்ச‌ம் கூடுத‌லாக‌ ஓடி முத‌ல் ப‌ரிசை வாங்கிய‌வுட‌ன் உலக‌ம் அவ‌னுக்கு த‌ருகிற‌ ம‌ரியாதை அவனுக்கு ஒரு புதிய உலகத்தையே உருவாக்கும்..அதற்காக அவன் செய்தது என்னன்னா அவனைவிட கொஞ்சம் கூடுதலாக ஓடியதுதுதான்..

கொஞ்ச‌ம் கூடுத‌ல் என்ப‌து புதிய‌ உல‌கையே உருவாக்கிவிடும்..so happy invest our bank...

ம‌ற்ற‌ வ‌ங்கிக‌ளைக்காட்டிலும் எங்க‌ள் வ‌ங்கியின் வ‌ட்டி விகித‌ம் கொஞ்சம்தான் கூடுதல் என்றாலும்; முடிவில் உங்க‌ளுக்கு ஒரு புதிய‌ உல‌கையே உருவாக்கிவிடும்..

ஓவ்வொரு முறையும் எனக்கு தோல்விகளோ அல்லது என் முயற்சிகள் மீது தடைகள் வரும்பொழுதோ; இந்த விளம்பரத்தை நினைத்துக்கொள்வேன்...இந்த படம் அந்த வரிகள் இரண்டையும் இணைத்தால் வெளிப்படுகிற கருத்துக்கள் ஏராளம்..

நுனுக்கமான கருத்துகளையும்,அதை எளிமையாக சொன்ன வித்தையையும் தெரிந்து கொண்ட இந்த மாதிரி திறமையானவர்கள்தான் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.என்று என் மனதிற்கு அடிக்கடி தோன்றும்..

Friday, September 17, 2010

ரகுமான் ஆஸ்கார் பெற்ற பொழுது...

ரகுமான் ஆஸ்கார் பெற்ற பொழுது மிகவும் மகிழ்சி அடைந்தேன்...ஒரு தமிழனா இதை நினைத்து வெறும் பெருமை மட்டும் படக்கூடாது..அவருக்கு Mail- ல‌ வாழ்த்து சொன்னா அது பத்தோடு பதினொன்றா இருக்கும்னு நினச்சேன்..அவரைப்பற்றி சில வரிகள் எழுதலாமேனு யோசிச்சேன்...எழுதிட்டேன்...இப்போ அது பிளாக்லயும்..

              
எல்லா புகழும் இறைவனுக்கே...பெருமையடைகிறோம்; உன்னால்.

சாந்தத்தின் உருவமே..ஆஸ்கார் நாயகனே...

ரோஜாவில் தொடங்கினாய் இன்னும் மலர்ந்துகொண்டே இருக்கிறாய்...

* உனது முதல் தமிழ் இசை வைரமுத்துவின் வரிகளில் "ரோஜா" உனக்கு மகுடம் சூட்டியதை யாரும் மறக்க வில்லை..

* காதல் ரோஜாவே! எங்கே... நீ எங்கே! ஒவ்வொரு காதலனும் தன் காதலியை தேடிக்கொண்டிருக்கிறான் அந்த ராகத்தில் இன்னும்..

* எனக்கு தெரிந்தவரை முழு இரவும் வேலை செய்வது "நீயும்" "நிலவும் மட்டும்தான்..

* எங்களுக்கெல்லாம் இசை என்பது வெறும் பேச்சு.உனக்கோ! உயிர் மூச்சு..

* ராஜாவின் தாலாட்டில் நாங்கள் தவழ்ந்தோம்; உன் தடாலடியால்தான் நாங்கள் வளர்ந்தோம்.

* ஆஸ்காருக்கு மேல் விருது இல்லையாம் ,அதனால்தான் உனக்கு ஆஸ்கார் கிடைத்திருக்கிறது..

* நீ எந்த உலக விருதுக்கும் குறி வைக்காதே, ஏனென்றால் உன்னிடம் வரும் விருதுகள் அதற்கு பெருமை தேடிக்கொள்கிறது.

* விருதுக்கும் பெருமை சேர்த்தவனே..அமெரிக்காவுக்கும் பதிலடி கொடுத்தவனே;

 இசையால் உனக்கு பெருமை இல்லை..உன்னால்தான் இசைக்கு பெருமை..

*எங்கள் சமகாலத்து நண்பனே..உலக விருதுக்கு உரியவனே..

                                                                                    தொடரட்டும் உனது பயணம்..

Tuesday, September 14, 2010

சிந்து சமவெளி‍-படத்தின் டைரக்டருக்கு (‍என் பார்வையில்.)

முரண்பாடான கதைனு கேள்விப்பட்டதும் பார்க்ககூடாதுன்னு இருந்தேன்..ஒரு நண்பர் இந்தக் கதையை கேள்விப்பட்டு ஏன் இப்படி எல்லாம் சினிமா எடுக்கிறாங்கன்னு மிகவும் வருத்தப்பட்டார்...அவர் வருத்தததை முடிந்தவரை சில பேருக்கு தெரிவிக்கனும்னு நினச்சேன்..படத்தை பார்க்காமல் இந்தப்படத்தை பற்றி எழுத எனக்கு மனம் இல்லை..அதனால் படத்தை பார்த்துவிட்டு வந்து..டைரக்டர் சாமிக்கு நான் சொல்ல‌னும்னு நினச்சது..


..(மாமானாருக்கும் மருகளுக்கும் உள்ள உறவு)


படத்தின் கதை பற்றியோ காட்சிக‌ளைப்ப‌ற்றியோ எதையும் சொல்ல‌ விருப்ப‌ம் இல்லை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலயே ஒரு வெளிநாட்டுக் கதை ஆசிரியர் ஒருவர் இந்த முரண்பாடான கதையை எழுதியிருக்கார் அதை தழுவித்தான் இந்த திரைக்கதை இருக்குன்னு டைட்டில்ல சொல்ரீங்க...அதைத்தவிர இந்தக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும்   100% கற்பனை                                                                                                         ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍இல்லை..நீங்கள் செய்த்தித்தாளிலோ அல்லது செய்தியிலோ கேட்ட பார்த்த விசயங்கள்னு சொல்ரீங்க..ஓகே .இருக்கலாம்..இருந்திருக்கு.

குழந்தை பருவத்திலிருந்து ஒவ்வொரு மனிதனும் நல்லது கெட்டது நல்ல விசயங்கள் கெட்ட விசயங்கள் அனைத்தையும் பார்த்துதான் வளர்கிறோம்.தவிர இதில் எதை (நல்லது‍ கெட்டது) அதிகமா பின்பற்றி போகிறோமோ நம் மனம் அதை சார்ந்துதான் இருக்கு..
இருக்கும் அது மனித இயல்பு.ஒரே ஒரு விசயம் சொல்லிட்ரேன்..விவேகாணந்தரை நினைச்சா தன்னம்பிக்கை நியாபகம் வருது அதே மாதிரி பின்லேடனை நினைச்சா கோபம்,பழிவாங்கல் இந்த மாதிரி விசயங்கள் நியாபகம் வருது..ஒரு தீவரவாதிய நாம கண்டபடி திட்றோம்.ஆனா அவங்களோட வாத‌த்தை கேட்ட நாமளும் திவிரவாத்துக்கு மாறிடுவோம்..ஆனால் தீவிரவாதம் முற்றிலும் தவறுன்னு எல்லோருக்கும் தெரியும்.

நாம யார அல்லது என்ன பார்க்கிறோமோ அதுவா நம்மள நினைக்க தோன்றும்..ஏன்னா மனித மனம் ஒரு குரங்கு.
உலகத்துல எவ்வளவோ கெட்ட விசயங்கள் இருக்கு நம்ம எல்லோருக்கும் தெரியும்..அது இருந்திட்டு போகட்டுமே..நாம அதை சினிமா மூலமா வெளிக்காட்டி இன்னும் நம்மள‌  கேவல‌ப்படுத்திக்கனுமா.
ஒரு முரண்பாடான கதையை எடுத்திருக்கீங்க..(மாமானாருக்கும் மருகளுக்கும் உள்ள உறவு) எல்லோரும் உங்கள‌ திட்ராங்கன்னு சொன்னீங்க..உங்கள திட்ட எனக்கு உரிமை இல்லை..ஆனா நான் நெனச்சத சொல்ல எனக்கு உரிமை இருக்கு இல்லையா..

சினிமா என்பது ஒரு பெரிய விசயம்..இதே சினிமாதான் அஞசலி, ரோஜா, அன்பே சிவம்,இந்த மாதிரி மிசச்சிறந்த சினிமாக்களை தந்தது..நல்ல விசயங்கள் வெளியே கிடந்தாலும் அதை எடுப்பதற்கு ஆட்கள் குறைவு..கெட்ட விசயங்கள் மறைந்து கிடந்தாலும் உடனே வெளியில் எடுக்கப்படும்..இதுதான் உலகம்..இது இப்படித்தான் இருக்கும்...உலகத்துல இருக்கிறதத்தான் நான் சொல்லியிருக்கேன் சொல்ரீங்க...உண்மையாக இருக்கலாம்..ஆனா நாம அதை வெளிக்காட்டி தகாத உறவுகளுக்கு மேலும் வழிவகுக்கனுமா.....

இந்த மாதிரி சினிமாக்கள் முரண்பாடான எண்ணங்களுக்கும் தவறான செய‌ல்களுக்கும்  மேலும் வழிவகுக்கும் இந்த மாதிரி நடக்கிற இடத்துல இந்த படத்தின் மூலமா இது நியாயமா தெரியும்...என்பது என்னோட கருத்து மட்டுமே..இதற்கு மேல் எந்த மாதிரி படங்களை எடுப்பது என்பதெல்லாம் உங்களது வேலை ;உங்களது தொழில் ,ஆனால் நீங்கள் நல்ல இயக்குனரா என்பதை தீர்மானிப்பதும் அதுவே......

இந்த கருத்து சரியென்று ஒரு பதில் கருத்து கிடைத்தாலும்
என் நண்பரின் வருத்தத்துக்கும் என் வருத்தத்துக்கும் ஆறுதல் கிடைத்ததாக எடுத்துக்கொள்வேன்...

கடைசியா ஒரே ஒரு விசயம் சொல்லிட்ரேன்..
100 ஆண்டுகள் காமம் மட்டுமே அனுபவித்து வந்தவனின் இன்பத்தை விட ஒரு தியானம் தரும் இன்பம் மேலானது... (எங்கேயோ படித்தது).

Tuesday, September 07, 2010

நான் மகான் அல்ல..‍விமர்சனம்.(என் பார்வையில்..)




ஜாலியான பைய"னா இருக்கிற கார்த்திக்கு தன்னோட அப்பா மூலமா எதிர்பாராதவிதமா ஒரு பிரச்சனை வருது அதன்மூலமா கார்த்தியோட அப்பா செத்திட்ராரு..அப்பறம் கார்த்தி எப்படி அவுங்களை எல்லாம் பழி வாங்கறாருங்றதுதான் "கதைனு" சொல்ரதவிட நல்ல‌ "ஸ்கிரின்-‍‍‍பிளே"னு சொல்லலாம்...
  இதற்கிடையில காதல் ரொமான்ஸ் னு மனுசன் பின்றாரு கார்த்தி..கண்டிப்பா இந்த படம் மணிரத்னம்,பாலா படம் பாக்ர‌வங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன்..ஏன்னா முதல் காட்சியே வில்லன்களா வர்ர அந்த நாலு பசங்க எப்படிபட்டவங்கன்னு சொல்லிட்டாரு "சுசி".கார்த்திக்கு ல‌வ் ரொமான்ஸ் நல்ல வொர்க் அவுட் ஆகுது..ரொமான்ஸ் எல்லாமே பில்டப்பா இல்லாம ரசிக்கிற மாதிரியா இருக்கு.

கார்த்தி அம்மாகிட்ட பேசறது..அப்பாகிட்ட பணம் வாங்றது..எல்லாமே இதெல்லாம் நம்ம பண்ண மாதிரி ஒரு ஃபீல் இருக்கு கார்த்தி..கீப் இட் அப்..ஆக்ஸன் ok ..(Carful surya).

   ஆனாலும் அந்த பசங்கள்ள ஒருத்தனா வர்ர அந்த முட்டை கண்ணண் நல்ல தேர்வு சுசி(பாலகிட்ட முதல் படம் நடிச்சவராச்சே ‍நந்தா படத்துல அந்த சின்ன சூர்யா).அந்த பசங்களுக்கு மாமாவா வர்ர ஒருத்தன்..ரவுடீனு முகத்துல எழுதி ஒட்டிருக்கு...கார்த்தியோட ஒரே அடியில் கீழ விழுந்திட்ரான்..ஏன்னா அவன் கஞ்சா அடிக்கறவன்..எல்லாத்துகும் logic வச்சிருக்கீங்க..சுசி..சூப்பரா செலக்ஸன் பன்னிருக்கீங்க...ஆனாலும் கார்த்தி! நாயகன் கமல் மாத்ரினு ஒரு வில்லன சொல்ரீங்க ஆனா அவர சாதாரணமா போட்ராங்க..

காசி விஸ்வநாதன் (எடிட்டிங்) + மதி(கேமரா) எல்லாரோட‌ பாராட்டுகளிலும் உங்களோட பங்கு இருக்கு..ஆனாலும் மதி..Awesome.கடைசீல வர்ர fight அசுர உழைப்பு மதி..ரியலி சூப்பர்..ஜெயபிரகாஸ் கார்த்தியோட அப்பா எவரிதிங் ஒகே..காஜல் அகர்வால் ம்ம்ம்ம்..ஒகே.but intervel-க்கு பிறகு காட்டாம விட்டுட்டீங்களே சுசி..இனிமேல் கார்த்தி படத்துக்கு எப்போதும் காமெடிக்கு தனியா ஒருத்தர நடிக்க வச்சு சம்பளம் கொடுக்க வேண்டியதில்ல...யுவன் எப்பவும் போல...நா முத்துக்குமார் எப்பவும் போல..சூர்யாவுக்கு ஹாரிஸ்னா..கார்த்திக்கு யுவன்னு form ஆகிடுச்சு..




சுசி அந்த பீச்சுல வர்ர அந்த(கிஸ் கொடுக்கும் போது -சுண்டல்) ரொமன்ஸ் தனி sequence வச்சிருக்கலாம்..ஒரு song ல‌ காட்ரீங்க‌..ஏன்னா நாங்களும் நிறைய சுண்டல் வாங்கியிருக்கோம்...(கிஸ் கொடுக்க முடியாம‌).
ஆனாலும் இந்த படத்துக்கு மதிதான் என் சாய்ஸ்! சுசி நீங்க டைரக்டர்-தான் இருந்தாலும்..மதிதான் இந்த படத்தோட heronu - சொல்லனும்னு தோனுது....