Pages

Tuesday, September 07, 2010

நான் மகான் அல்ல..‍விமர்சனம்.(என் பார்வையில்..)




ஜாலியான பைய"னா இருக்கிற கார்த்திக்கு தன்னோட அப்பா மூலமா எதிர்பாராதவிதமா ஒரு பிரச்சனை வருது அதன்மூலமா கார்த்தியோட அப்பா செத்திட்ராரு..அப்பறம் கார்த்தி எப்படி அவுங்களை எல்லாம் பழி வாங்கறாருங்றதுதான் "கதைனு" சொல்ரதவிட நல்ல‌ "ஸ்கிரின்-‍‍‍பிளே"னு சொல்லலாம்...
  இதற்கிடையில காதல் ரொமான்ஸ் னு மனுசன் பின்றாரு கார்த்தி..கண்டிப்பா இந்த படம் மணிரத்னம்,பாலா படம் பாக்ர‌வங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன்..ஏன்னா முதல் காட்சியே வில்லன்களா வர்ர அந்த நாலு பசங்க எப்படிபட்டவங்கன்னு சொல்லிட்டாரு "சுசி".கார்த்திக்கு ல‌வ் ரொமான்ஸ் நல்ல வொர்க் அவுட் ஆகுது..ரொமான்ஸ் எல்லாமே பில்டப்பா இல்லாம ரசிக்கிற மாதிரியா இருக்கு.

கார்த்தி அம்மாகிட்ட பேசறது..அப்பாகிட்ட பணம் வாங்றது..எல்லாமே இதெல்லாம் நம்ம பண்ண மாதிரி ஒரு ஃபீல் இருக்கு கார்த்தி..கீப் இட் அப்..ஆக்ஸன் ok ..(Carful surya).

   ஆனாலும் அந்த பசங்கள்ள ஒருத்தனா வர்ர அந்த முட்டை கண்ணண் நல்ல தேர்வு சுசி(பாலகிட்ட முதல் படம் நடிச்சவராச்சே ‍நந்தா படத்துல அந்த சின்ன சூர்யா).அந்த பசங்களுக்கு மாமாவா வர்ர ஒருத்தன்..ரவுடீனு முகத்துல எழுதி ஒட்டிருக்கு...கார்த்தியோட ஒரே அடியில் கீழ விழுந்திட்ரான்..ஏன்னா அவன் கஞ்சா அடிக்கறவன்..எல்லாத்துகும் logic வச்சிருக்கீங்க..சுசி..சூப்பரா செலக்ஸன் பன்னிருக்கீங்க...ஆனாலும் கார்த்தி! நாயகன் கமல் மாத்ரினு ஒரு வில்லன சொல்ரீங்க ஆனா அவர சாதாரணமா போட்ராங்க..

காசி விஸ்வநாதன் (எடிட்டிங்) + மதி(கேமரா) எல்லாரோட‌ பாராட்டுகளிலும் உங்களோட பங்கு இருக்கு..ஆனாலும் மதி..Awesome.கடைசீல வர்ர fight அசுர உழைப்பு மதி..ரியலி சூப்பர்..ஜெயபிரகாஸ் கார்த்தியோட அப்பா எவரிதிங் ஒகே..காஜல் அகர்வால் ம்ம்ம்ம்..ஒகே.but intervel-க்கு பிறகு காட்டாம விட்டுட்டீங்களே சுசி..இனிமேல் கார்த்தி படத்துக்கு எப்போதும் காமெடிக்கு தனியா ஒருத்தர நடிக்க வச்சு சம்பளம் கொடுக்க வேண்டியதில்ல...யுவன் எப்பவும் போல...நா முத்துக்குமார் எப்பவும் போல..சூர்யாவுக்கு ஹாரிஸ்னா..கார்த்திக்கு யுவன்னு form ஆகிடுச்சு..




சுசி அந்த பீச்சுல வர்ர அந்த(கிஸ் கொடுக்கும் போது -சுண்டல்) ரொமன்ஸ் தனி sequence வச்சிருக்கலாம்..ஒரு song ல‌ காட்ரீங்க‌..ஏன்னா நாங்களும் நிறைய சுண்டல் வாங்கியிருக்கோம்...(கிஸ் கொடுக்க முடியாம‌).
ஆனாலும் இந்த படத்துக்கு மதிதான் என் சாய்ஸ்! சுசி நீங்க டைரக்டர்-தான் இருந்தாலும்..மதிதான் இந்த படத்தோட heronu - சொல்லனும்னு தோனுது....

No comments:

Post a Comment