Pages

Friday, September 17, 2010

ரகுமான் ஆஸ்கார் பெற்ற பொழுது...

ரகுமான் ஆஸ்கார் பெற்ற பொழுது மிகவும் மகிழ்சி அடைந்தேன்...ஒரு தமிழனா இதை நினைத்து வெறும் பெருமை மட்டும் படக்கூடாது..அவருக்கு Mail- ல‌ வாழ்த்து சொன்னா அது பத்தோடு பதினொன்றா இருக்கும்னு நினச்சேன்..அவரைப்பற்றி சில வரிகள் எழுதலாமேனு யோசிச்சேன்...எழுதிட்டேன்...இப்போ அது பிளாக்லயும்..

              
எல்லா புகழும் இறைவனுக்கே...பெருமையடைகிறோம்; உன்னால்.

சாந்தத்தின் உருவமே..ஆஸ்கார் நாயகனே...

ரோஜாவில் தொடங்கினாய் இன்னும் மலர்ந்துகொண்டே இருக்கிறாய்...

* உனது முதல் தமிழ் இசை வைரமுத்துவின் வரிகளில் "ரோஜா" உனக்கு மகுடம் சூட்டியதை யாரும் மறக்க வில்லை..

* காதல் ரோஜாவே! எங்கே... நீ எங்கே! ஒவ்வொரு காதலனும் தன் காதலியை தேடிக்கொண்டிருக்கிறான் அந்த ராகத்தில் இன்னும்..

* எனக்கு தெரிந்தவரை முழு இரவும் வேலை செய்வது "நீயும்" "நிலவும் மட்டும்தான்..

* எங்களுக்கெல்லாம் இசை என்பது வெறும் பேச்சு.உனக்கோ! உயிர் மூச்சு..

* ராஜாவின் தாலாட்டில் நாங்கள் தவழ்ந்தோம்; உன் தடாலடியால்தான் நாங்கள் வளர்ந்தோம்.

* ஆஸ்காருக்கு மேல் விருது இல்லையாம் ,அதனால்தான் உனக்கு ஆஸ்கார் கிடைத்திருக்கிறது..

* நீ எந்த உலக விருதுக்கும் குறி வைக்காதே, ஏனென்றால் உன்னிடம் வரும் விருதுகள் அதற்கு பெருமை தேடிக்கொள்கிறது.

* விருதுக்கும் பெருமை சேர்த்தவனே..அமெரிக்காவுக்கும் பதிலடி கொடுத்தவனே;

 இசையால் உனக்கு பெருமை இல்லை..உன்னால்தான் இசைக்கு பெருமை..

*எங்கள் சமகாலத்து நண்பனே..உலக விருதுக்கு உரியவனே..

                                                                                    தொடரட்டும் உனது பயணம்..

No comments:

Post a Comment