Pages

Tuesday, September 14, 2010

சிந்து சமவெளி‍-படத்தின் டைரக்டருக்கு (‍என் பார்வையில்.)

முரண்பாடான கதைனு கேள்விப்பட்டதும் பார்க்ககூடாதுன்னு இருந்தேன்..ஒரு நண்பர் இந்தக் கதையை கேள்விப்பட்டு ஏன் இப்படி எல்லாம் சினிமா எடுக்கிறாங்கன்னு மிகவும் வருத்தப்பட்டார்...அவர் வருத்தததை முடிந்தவரை சில பேருக்கு தெரிவிக்கனும்னு நினச்சேன்..படத்தை பார்க்காமல் இந்தப்படத்தை பற்றி எழுத எனக்கு மனம் இல்லை..அதனால் படத்தை பார்த்துவிட்டு வந்து..டைரக்டர் சாமிக்கு நான் சொல்ல‌னும்னு நினச்சது..


..(மாமானாருக்கும் மருகளுக்கும் உள்ள உறவு)


படத்தின் கதை பற்றியோ காட்சிக‌ளைப்ப‌ற்றியோ எதையும் சொல்ல‌ விருப்ப‌ம் இல்லை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலயே ஒரு வெளிநாட்டுக் கதை ஆசிரியர் ஒருவர் இந்த முரண்பாடான கதையை எழுதியிருக்கார் அதை தழுவித்தான் இந்த திரைக்கதை இருக்குன்னு டைட்டில்ல சொல்ரீங்க...அதைத்தவிர இந்தக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும்   100% கற்பனை                                                                                                         ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍இல்லை..நீங்கள் செய்த்தித்தாளிலோ அல்லது செய்தியிலோ கேட்ட பார்த்த விசயங்கள்னு சொல்ரீங்க..ஓகே .இருக்கலாம்..இருந்திருக்கு.

குழந்தை பருவத்திலிருந்து ஒவ்வொரு மனிதனும் நல்லது கெட்டது நல்ல விசயங்கள் கெட்ட விசயங்கள் அனைத்தையும் பார்த்துதான் வளர்கிறோம்.தவிர இதில் எதை (நல்லது‍ கெட்டது) அதிகமா பின்பற்றி போகிறோமோ நம் மனம் அதை சார்ந்துதான் இருக்கு..
இருக்கும் அது மனித இயல்பு.ஒரே ஒரு விசயம் சொல்லிட்ரேன்..விவேகாணந்தரை நினைச்சா தன்னம்பிக்கை நியாபகம் வருது அதே மாதிரி பின்லேடனை நினைச்சா கோபம்,பழிவாங்கல் இந்த மாதிரி விசயங்கள் நியாபகம் வருது..ஒரு தீவரவாதிய நாம கண்டபடி திட்றோம்.ஆனா அவங்களோட வாத‌த்தை கேட்ட நாமளும் திவிரவாத்துக்கு மாறிடுவோம்..ஆனால் தீவிரவாதம் முற்றிலும் தவறுன்னு எல்லோருக்கும் தெரியும்.

நாம யார அல்லது என்ன பார்க்கிறோமோ அதுவா நம்மள நினைக்க தோன்றும்..ஏன்னா மனித மனம் ஒரு குரங்கு.
உலகத்துல எவ்வளவோ கெட்ட விசயங்கள் இருக்கு நம்ம எல்லோருக்கும் தெரியும்..அது இருந்திட்டு போகட்டுமே..நாம அதை சினிமா மூலமா வெளிக்காட்டி இன்னும் நம்மள‌  கேவல‌ப்படுத்திக்கனுமா.
ஒரு முரண்பாடான கதையை எடுத்திருக்கீங்க..(மாமானாருக்கும் மருகளுக்கும் உள்ள உறவு) எல்லோரும் உங்கள‌ திட்ராங்கன்னு சொன்னீங்க..உங்கள திட்ட எனக்கு உரிமை இல்லை..ஆனா நான் நெனச்சத சொல்ல எனக்கு உரிமை இருக்கு இல்லையா..

சினிமா என்பது ஒரு பெரிய விசயம்..இதே சினிமாதான் அஞசலி, ரோஜா, அன்பே சிவம்,இந்த மாதிரி மிசச்சிறந்த சினிமாக்களை தந்தது..நல்ல விசயங்கள் வெளியே கிடந்தாலும் அதை எடுப்பதற்கு ஆட்கள் குறைவு..கெட்ட விசயங்கள் மறைந்து கிடந்தாலும் உடனே வெளியில் எடுக்கப்படும்..இதுதான் உலகம்..இது இப்படித்தான் இருக்கும்...உலகத்துல இருக்கிறதத்தான் நான் சொல்லியிருக்கேன் சொல்ரீங்க...உண்மையாக இருக்கலாம்..ஆனா நாம அதை வெளிக்காட்டி தகாத உறவுகளுக்கு மேலும் வழிவகுக்கனுமா.....

இந்த மாதிரி சினிமாக்கள் முரண்பாடான எண்ணங்களுக்கும் தவறான செய‌ல்களுக்கும்  மேலும் வழிவகுக்கும் இந்த மாதிரி நடக்கிற இடத்துல இந்த படத்தின் மூலமா இது நியாயமா தெரியும்...என்பது என்னோட கருத்து மட்டுமே..இதற்கு மேல் எந்த மாதிரி படங்களை எடுப்பது என்பதெல்லாம் உங்களது வேலை ;உங்களது தொழில் ,ஆனால் நீங்கள் நல்ல இயக்குனரா என்பதை தீர்மானிப்பதும் அதுவே......

இந்த கருத்து சரியென்று ஒரு பதில் கருத்து கிடைத்தாலும்
என் நண்பரின் வருத்தத்துக்கும் என் வருத்தத்துக்கும் ஆறுதல் கிடைத்ததாக எடுத்துக்கொள்வேன்...

கடைசியா ஒரே ஒரு விசயம் சொல்லிட்ரேன்..
100 ஆண்டுகள் காமம் மட்டுமே அனுபவித்து வந்தவனின் இன்பத்தை விட ஒரு தியானம் தரும் இன்பம் மேலானது... (எங்கேயோ படித்தது).

5 comments:

  1. சினிமா என்பது ஒரு பெரிய விசயம்..இதே சினிமாதான் அஞசலி, ரோஜா, அன்பே சிவம்,இந்த மாதிரி மிசச்சிறந்த சினிமாக்களை தந்தது..நல்ல விசயங்கள் வெளியே கிடந்தாலும் அதை எடுப்பதற்கு ஆட்கள் குறைவு..கெட்ட விசயங்கள் மறைந்து கிடந்தாலும் உடனே வெளியில் எடுக்கப்படும்..இதுதான் உலகம்..இது இப்படித்தான் இருக்கும்...உலகத்துல இருக்கிறதத்தான் நான் சொல்லியிருக்கேன் சொல்ரீங்க...உண்மையாக இருக்கலாம்..ஆனா நாம அதை வெளிக்காட்டி தகாத உறவுகளுக்கு மேலும் வழிவகுக்கனுமா.....
    Migavum sariyaana... ovvoru iyakkunarum sinthikka vaendiya kaelvi ithu Ram.......

    ReplyDelete
  2. நன்றி இவின்..

    ReplyDelete
  3. உங்கள் படைப்புகள் சமுதாயத்திற்குப் பயன்படும்.உங்கள் விமர்சனத்திற்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. உங்கள் படைப்புகள் சமுதாயத்திற்குப் பயன்படும். உங்கள் விமர்சனத்திற்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. நன்றி ரமேஸ்..

    ReplyDelete